share your wall

யுத்தத்தின் சீரழிவினைச் சிறப்பாக சித்தரிக்கும் குவர்ணிகா ஓவியம்

kuvarnkaa,pikaso,picaso,airoppa oviyam,minnel
 ஜெர்மன்  யுத்தத்தினது கொடுமையால்  குவர்ணிகா நகரின் நிலையை  கூறும் உலகப் புகழ்பெற்ற ஆக்கம் இதுவாகும்.ஆகாயத் தாக்குதல் மூலம் குண்டுகள் பொழியப் பட்ட பொழுது நகரில் ஏற்பட்ட சோகமயமான நிலை,சிதறிய கிராமம்,மக்களின் மரண ஓலங்கள்   போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட மனக்குமுறலை பிக்காசோ தனது குறிப்பு புத்தகத்தில் குறித்துக் கொண்டார்.

பின்னர் 1937இல் கன்வாஸ் துணியில் எண்ணெய் வர்ணத்தால் அதனை சித்திரமாக உருவாக்கினார். இச்சித்திரம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.ஆழமான் கருத்தாளம் கொண்ட அறிய ஒரு படைப்பாக கருதப் படுகிறது. இச்சித்திரத்தில் குவர்ணிக்கா நகரில் வாழ்ந்த வயோதிபர்கள், இளைஜகள்,குழந்தைகள், விலங்குகள், வீடுகள் போன்றவற்றின் சிதறல்கள் இதில் காணப்படுகின்றன. 

 கருப்பு ,வெள்ளை ,கபிலம் போன்ற வர்ணங்கள் மட்டுமே இதில் உபயோகிக்கப்   பட்டுள்ளன. கொலாஜ் முறையில் உருவாக்கப் பட்ட இச்சித்திரம் உலகின் மிக சிறந்த பிக்காசோவின் ஆக்கமாகும். 
Read more…

பெற்றோர் தமது டீன் ஏஜ் பிள்ளைகளை எவ்வாறு சமாளிக்கலாம்?

paruva vayathu,pillai,petror
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண காரியமில்லை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் உறவுச்சிக்கல்கள் மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கிறான் என்று கூறும் பெற்றோர்கள் ஒருபக்கம், என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்று கூறும் பிள்ளைகள் மறுபக்கம் என இருவேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்பார்கள்.

இதைக் கருத்தில்கொண்டு பெற்றோர்கள் தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று இணையதளம் ஒன்று ஆய்வினை நடத்தியிருக்கிறது.

தனக்கு இருக்கும் தனித்திறமையை பெற்றோர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளையிடம் உள்ள நல்ல திறமைகளை சுட்டிக்காட்டிப்பேசுங்கள். நான் உன்னை நினைச்சுப் பெருமை படுறேன் என்று கூறுங்கள். அந்த மந்திர வார்த்தைக்கு உங்கள் பிள்ளைகள் கட்டுப்படுவார்கள்.

உங்கள் குழந்தைகள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அளவுகடந்த கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக்காட்டுங்கள் ஏனென்றால் பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

பெற்றோர்கள் பேசிய வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கலாம், எனவே ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்து விடாது. தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும்.

பதின் பருவம் என்பது மிகவும் சிக்கலான பருவம். எந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பருவம். தாம் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற ஏக்கம் நிறைந்துள்ள காலம். குழப்பம் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்புங்கள். ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போடாதீர்கள் அப்புறம் உங்களைக் கண்டாலே காததூரம் ஓடுவார்கள். எனவே பிள்ளைகள் உறங்கும் நேரத்தில் பேச்சை ஆரம்பியுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விசயங்களை நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். 
Read more…

ஆண்களின் தாடியில் ஏற்படும் பொடுகை போக்கும் வழிகள்


meesai,thaadi,potuku,minnel
 இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு சூரிய வெப்பத்தின் காரணமாக உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் குறைந்து, உடல் விரைவில் வறட்சியாகி விடுகிறது. இதனால் தலையில் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுகிறது, இத்தகைய தொல்லை பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான் இருக்கிறது. அதிலும் ஆண்கள் பெரிதும் அவஸ்தைப்படுவது, பொடுகுத் தொல்லைகளாலேயே. அதுமட்டுமல்லாமல் உதடுகளில் வறட்சி, செதில் போன்று தோல் வருதல் மற்றும் தாடிகளில் தலைப் பொடுகு வருவது போன்றவைகளும் ஏற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு விரைவில் வயது முதிர்ந்த தோற்றமானது ஏற்படுகிறது.

அதிலும் சில ஆண்கள் தலையில் பொடுகிற்கு பயன்படுத்தும் ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை, தாடிகளில் பொடுகு வருகிறது என்று பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் சருமம் தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அதனையெல்லாம் பயன்படுத்தாமல், தலையில் வரும் பொடுகு முகத்திற்கு வருவதற்கு காரணமான தலையணை உறை, பெட்சீட் போன்றவற்றை நன்றாக துவைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் ஒரு சில வீட்டு மருந்துகளையும் பயன்படுத்தினால், அவற்றை வராமல் தடுக்கலாம்.

தாடிகளில் உள்ள பொடுகு போவதற்கு...

* வேப்ப எண்ணெயை தலைக்கு, புருவத்திற்கு, தாடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு வராமல் இருப்பதோடு, சருமமும் வறட்சி அடையாமல் இருக்கும். ஏனெனில் இவை பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழித்துவிடும்.

* எலுமிச்சையும் ஒரு சிறந்த எளிதான மருந்து. அதற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து தாடிகளில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலை வைத்து தாடிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் தலைகளில், தாடிகளில், புருவத்தில் வரும் பொடுகளை தவிர்க்கலாம்.

* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, அந்த பேஸ்டை முகத்திற்கு, கூந்தலுக்கு தடவினால், பொடுகுத் தொல்லை வராமல் இருக்கும்.

* மற்றொரு முறை வீட்டிலேயே பொடுகிற்கான ஷாம்புகளை தயாரிக்கலாம். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் சீகைக்காய், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி, ஹென்னா மற்றும் தயிர் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கூந்தல், தாடி, புருவம் போன்றவற்றில் தடவி, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசவும்.

* பாகற்காய் பசை, மஞ்சள், கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து, முகத்திற்கு தடவினால், பொடுகு போவதுடன், சருமமும் வறட்சி இல்லாமல் இருக்கும்.

வறண்ட சருமத்திற்கு, சரும வெடிப்புக்காக கடைகளில் விற்கும் சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூந்தலை அலசினால், தலையில் பொடுகு வருவதைத் தடுக்கலாம். தலைக்கு குளிக்கும் அரை மணி நேரத்திற்கு முன், கூந்தலுக்கு எண்ணெயை தடவி ஊற வைத்து, பின் குளிக்கவும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

Read more…

900 கோடி செலவில் உருவாகும் டோடல் ரீகால் தமிழிலும்

holluwood,collin ferrel
1990-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய ஹாலிவுட் படமான 'டோட்டல் ரீகால்' பெயரில் மீண்டும் புதுப்படம் தயாராகி உள்ளது. ரூ.900 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்தில் இப்படம் படமாகியுள்ளது.

எதிர்காலத்தில் நடப்பது பற்றிய கற்பனை கதை. 2084-ல் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டு உள்ளது. பூமி ஒரு பேரழிவை உருவாக்கிய போருக்குபின் அதிகார சக்திகளால் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. யார் பலசாலி என்பதில் நாடுகள் சண்டை போட்டுக் கொள்கின்றன. இந்த அரசியல் பின்னணியில் டக்ளாஸ் குவாய்ட் போன்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளியையும், அமானுஷ்யங்களையும் கலந்து கதை செய்துள்ளனர்.

சாமானிய மனிதனாக வந்து சாகச மனிதராக மாறும் நாயகன் கேரக்டரில் காலின்பேரல் நடித்துள்ளார். ப்ரியான் க்ரான்ஸ்டன், கேட்பெகின்செல், ஜெஸிகாபீல், பில்நைட்டி, ஜான்ஜோ போன்ற பெரிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

லென் வைஸ்மேன் இயக்கியுள்ள இதன் முதல் படப்பிடிப்பு 2011 மேயில் துவங்கி கடந்த செப்டம்பரில் முடிந்தது. அறிவியல் சாகசங்களுடன் ஆக்ஷன் படமாக வருகிறது. இப்படத்தை 90 நாடுகளில் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமிழில் இப்படம் ஆகஸ்டு 3-ல் ரிலீசாகிறது.
Read more…

டைட்டானிக் உணவுப் பட்டியல் 3 5 லட்சத்திற்கு ஏலம் போனது

unavu pattiyal,titanic,elam
டைட்டானிக் கப்பலில் நடந்த விருந்தின்போது வழங்கிய உணவு பட்டியல் ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது. அதிநவீன ஆடம்பர பயணிகள் சொகுசு கப்பல் டைட்டானிக். கடந்த 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. அதில் பயணம் செய்த 1,522 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

இந்த கப்பல் மூழ்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அதாவது 1912 ஏப்ரல் 10-ந்தேதி அதில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு விருந்தளிக்கப்பட்டது. அதில் சாப்பிடுவதற்கு முன் பசியை தூண்டும் சூப் வகைகள், எலும்பு இல்லா கன்றுக்குட்டியின் இறைச்சி, வாத்து குஞ்சு வறுவல், பிரெஞ்சு ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இந்த உணவு வகை பட்டியல் தென்மேற்கு இங்கிலாந்தில் வில்ட்ஷர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பட்டியல் ரூ.35 லட் சத்துக்கு ஏலம் போனது. உணவு பட்டியலை கப்பலில் பயணம் செய்த சவுத்ஆம்டன் நகரை சேர்ந்த ஸ்டீவர்ட் (34) என்பவர் கப்பல் குயின்ஸ் டவுனில் நின்றபோது தனது மனைவி ஹில்டாவுக்கு அனுப்பி இருந்தார் தற்போது அது சார்லஸ் கேஸ்வெல் என்பவரிடம் இருந்தது. அவரிடம் இருந்து பெறப்பட்டு அது ஏலம் விடப்பட்டது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100 ஆண்டு நிறைவையொட்டி அதில் இருந்து மீட்கப்பட்ட 400 வகையான பொருட்கள் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more…

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த ககன் நரங்

shooting,sututhal,thupaki,olympic
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர் என்ற பெருமையை தனதாக்கியிருக்கிறார் பஞ்சாபைச் சேர்ந்த ககன் நரங்.

இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ககன் நரங், 701.1 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். 1983ம் ஆண்டு மே 6ம் தேதி சென்னையில் பிறந்த ககன் நரங், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு முறை உலக சாதனை படைத்திக்கிறார்.

2010ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கம் வென்று அசத்தினார். அதற்கு அடுத்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 2 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதுதவிர 2003ல் ஐதராபாத்தில் நடந்த அப்ரோ ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை போட்டிகளில் இதே ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார்.

விளையாட்டுத்துறையில் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை தேடித் தந்த இவரது சேவையைப் பாராட்டி 2010ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக 2009 ஆகஸ்டு மாதம் ஆண்டில் தனக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த நரங், 2010 காமன்வெல்த் போட்டியை புறக்கணிப்பதாக கூறினார். பின்னர் விளையாட்டுத்துறை சமாதானம் செய்ததையடுத்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற அவர், தங்கப் பதக்கங்களை வென்றார்.

அதற்கு முத்தாய்ப்பாக இப்போது ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறார். இவருக்கு முன்னர் துப்பாக்கி சுடுதலில் 2 இந்திய வீரர்கள் மட்டுமே பதக்க கனவை நிறைவேற்றினர்.

2004 ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (டபுள் டிராப்) வெள்ளிப் பதக்கமும், 2008 ஒலிம்பிக்கில் பிந்த்ரா தங்கமும் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் இதுவரை 8 இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர்.

வெண்கலம் வென்ற ககனுக்கு அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது சாதனையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ககன் நரங்கின் பிரத்யேக பேஸ்புக் தளத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகை தீபிகா படுகோனே, தியா மிர்சா மற்றும் ரக்பி வீரர் ராகுல் போஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Read more…

34 வருடங்களுக்குமுன் இறந்த பெண் திரும்பி வந்தது எப்படி?

maranam,pen, thirumpal,minnel
இங்கிலாந்தை சேர்ந்தவர் சிட். இவரது மனைவி சூசன் ஆர்ட்ரன் (61) இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1978-ம் ஆண்டு ரோட்டில் தனியாக சென்ற இவர் மீது கார் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே வீடு திரும்பாததால் கணவர் சிட் அவரை பல இடங்களில் தேடினார். இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கருதினர். அதைத் தொடர்ந்து தனது 4 குழந்தைகளுடன் சிட் இங்கிலாந்து திரும்பி லண்டனில் குடியமர்ந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் கிச்சை பெற்று வந்த சூசனுக்கு அம்னீசியா என்ற ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதனால்தான் யார் என்பதையே அவர் மறந்துவிட்டார்.

இதற்காக தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 34 வருடங்களுக்கு பிறகு அதாவது தனது 61-வது வயதில் குணமடைந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி பேஷ்புக் இணையதளத்தில் தகவல் வெளியிட்டார்.

அத்துடன் இளமைக் காலம் மற்றும் தற்போதைய தோற்றத்திலான போட்டோவையும் பிரசுரித்து இருந்தார். அதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

34 வருடங்களுக்கு பிறகு சூசன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Read more…

தண்ணீரில் இயங்கும் கார் பாகிஸ்தானியரால் கண்டுபிடிப்பு

thanneeril odum car,petrol
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலேயற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்  இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை அந்நாட்டு அமைச்சரவை துணை கமிட்டி நேரில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்நாட்டு மத விவகாரத் துறை அமைச்சர் சயீத் குர்ஷித் அகமது ஷா கூறுகையில், " வாகர் அகமதுவுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

மேலும், வாகர் அகமதுவுக்கும், அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்கப்படும்," என்றார்.

இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி," சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து புதிய தொழில்நுட்பம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை மூலம் இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீரில் இயங்கும் காரை அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் மதிப்பிட உள்ளதாக வாகர் அகமது தெரிவித்துள்ளார்.  
Read more…

ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வலம் வந்த மர்மப் பெண்


லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு நிற கோர்ட் அணிந்து கொண்டு, தலையில் மஞ்சள் நிற தலைபாகை உடன் நடந்து வந்தனர்.

அதேபோல இந்திய வீராங்கனைகள் அனைவரும் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு நடந்து வந்தனர். அப்போது இந்திய அணியில் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து ஒரு மர்மப்பெண் நடந்து வந்தார். அவர் யார் என்பது குறித்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியினருக்கு இவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியை தலைமை வகித்து நடத்தி சென்ற முரளிதரன் ராஜாவிற்கும் இந்த மர்மப் பெண் யார் என்பது தெரியவில்லை.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.

ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
Read more…

கண்களில் கருவளையம் ஏற்படக் காரணம் என்ன?

kan karuvalaiyam,karumai,minnel
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும். அந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெரிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்களை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகாக வைக்க, இதோ சில டிப்ஸ்...

நோய்கள் : அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களையும் போக்கும்.

களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், கண்களில் கருவளையமானது வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நீர் குறைவு : குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.

நிறமூட்டும் நிறமிகள் : சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளியே செல்லும் போது கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவதைத் தடுக்கலாம்.

மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப் பொருட்கள் பயன்படுத்தும் போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப் பொருட்களை எல்லாம் வாங்கி உபயோகிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களை விட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
Read more…

பாராசூட் மூலம் 29 கி.மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த வாலிபர்

paracuite,minnel,manithan
 ஆஸ்திரியாவை சேர்ந்தவர் பெலிஸ் பாம் கார்ட்னர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

பாராசூட் பிரிவில் பணிபுரிந்தார். இதுவரை 2,500 தடவை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

தைவானின் தைபே நகரில் உளள் 101 அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார். தற்போது இவர் வானத்தில் 29 கி.மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து அபார சாதனை புரிந்துள்ளார்.

இதற்காக பயிற்சி பெற்ற இவர் அமெரிக்காவில் நேற்று முன்தினம் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்தார். நியூமெக்சிகோவின் ரோஸ்வெல் என்ற இடத்தில் பத்திரமாக தரை இறங்கினர். இதற்காக அவர் சுமார் 1 1/2 மணி நேரம் எடுத்து கொண்டார்.

இது அவரது அபார சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில், இவர் குதித்தது ஜெட் விமானம் பறக்கும் உயரத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாகும். இவர் காற்று மண்டலத்திற்கு அப்பால் மேற்பரப்பில் இருந்து குதித்தார். எனவே, அவர் தன்னுடன் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து சென்றார்.

இவர் வானத்தில் இருந்து குதிக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் உதவி செய்தது. இவரது செயல்பாடுகளை கண்காணித்து வந்தது. இதற்கு முன்பு, கடந்த 1960-ம் ஆண்டில் ஜோ கிட்டிங் 20 மைல் உயரத்தில் இருந்து குதித்தது சாதனையாக இருந்து வந்தது.

அதை பாம்கார்ட்னர் நேற்று முன்தினம் முறியடித்தார். இதன் மூலம் வானத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Read more…

கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்கள்

olympic pathakkam,thankam,velli
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி வாகை சூடுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 2100 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. டேவிட் வாட்கின்ஸ் என்பவர் இந்த பதக்கத்தை வடிவமைத்துள்ளார். பதக்கம் 375 முதல் 400 கிராம் எடை கொண்டதாக இருக்கும், இது 85 மில்லி மீட்டர் சுற்றளவையும், 7 மில்லி மீட்டர் அடர்த்தியையும் கொண்டதாகும்.

தங்கப்பதக்கம் என்பது முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. அது 92.5 சதவீதம் வெள்ளி, 1.34 சதவீதம் தங்கம், 6.16 சதவீதம் செம்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தங்கப்பதக்கத்தில் குறைந்தது 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப்பதக்கம் 92.5 சதவீதம் வெள்ளி மற்றும் 7.5 சதவீதம் செம்பால் ஆனது. வெண்கலப்பதக்கத்தில் 97 சதவீதம் செம்பும் 2.5 சதவீதம் துத்தநாகமும் 0.5 சதவீதம் வெள்ளீயமும் இடம்பெற்றுள்ளது.

பதக்கத்தின் முன் பகுதியில் ஒரு போதும் மாற்றம் செய்யப்பட மாட்டாது. அதாவது கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி கோவிலில் இருந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதி, ஒலிம்பிக் போட்டி சின்னம், ஒலிம்பிக் வளையம் உள்ளிட்ட அம்சங்களுடன் கண்ணை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.   
Read more…

வைத்தியரின் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

pen, maranam,murder,minnel
திருவான்மியூர் அடுத்த பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் கதிரவன் (28). இவர் அதே பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். சொந்த ஊர் கும்பகோணம். இவரது மனைவி அன்புக்கரசி (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழுந்தை ஒன்று உள்ளது. அன்புக்கரசிக்கு சில நாட்களுக்கு முன்பு வாயின் உள்பகுதியில் கட்டி வந்துள்ளது. இதனால் அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.

நேற்று மதியம் சாப்பிட்டபோது வலி மிகவும் அதிகமாக இருந்தது. இதுபற்றி அவர் கதிரவனிடம் கூறினார். இதையடுத்து அவர் அன்புக்கரசியை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அன்னை கிளீனிக்குக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரை டாக்டர் பாலாஜி பரிசோதித்தார். பின்னர் அவர், வாயில் உள்ள கட்டியை அகற்றினால் வலி இருக்காது. எனவே கட்டியை அகற்றுவதற்கு வசதியாக கட்டி இருக்கும் பகுதியை மறத்துப்போகச் செய்ய ஊசி போடவேண்டும்.

அதன்பிறகு எந்த வலியும் இல்லாமல் கட்டியை அகற்றி விடலாம் என்றார். இதற்கு கதிரவன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர் பாலாஜி அன்புக்கரசிக்கு மறத்துப் போகச்செய்யும் ஊசியை போட்டார். பின்னர் இன்னும் சில நிமிடங்கள் கழித்து கட்டியை அகற்றுகிறேன் என்று கூறினார்.

இந்த ஊசி போட்ட சிறிது நேரத்தில் அன்புக்கரசி திடீரென மயங்கி விழுந்தார். இதில் பயந்துபோன டாக்டர் பாலாஜி அவரை பரிசோதித்தார். அப்போது அன்புக்கரசி இறந்து போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் பாலாஜி, கதிரவனிடம் சென்று உங்கள் மனைவி மயக்க நிலையில் உள்ளார். அவரை பிடித்துக் கொள்ளுங்கள் நான் பக்கத்தில் சென்று மருந்து வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு கிளீனிக்கை விட்டு தப்பி ஓடி விட்டார்.

நீண்ட நேரம் ஆகியும் டாக்டர் வராததால் கதிரவன், மனைவி அன்புக்கரசியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அதே பகுதியில் உள்ள இன்னொரு கிளினிக்குக்கு சென்றார். அங்கு அன்புக்கரசியைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.

இதை கேட்டதும் கதிரவன் கதறி அழுதார். தவறான ஊசியால் அன்புக்கரசி இறந்துபோன தகவல் அறிந்த பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்னை கிளீனிக்கை முற்றுகையிட்டனர்.

இதையறிந்ததும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கிளீனிக்கை முற்றுகையிட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.

அப்போது போலீசார் தவறான ஊசி போட்டு பெண்ணை கொன்ற டாக்டர் பாலாஜி மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை எற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புக்கரசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டாக்டர் பாலாஜியை தேடி வருகிறார்கள். பெரிய நீலாங்கரை குப்பத்தில் பதட்டம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
Read more…

பேஸ்புக் இன் புதிய அலுவலகம் லண்டனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

mukanool,facebook,office
உலகெங்கிலும் மக்களை தனது பக்கத்தில் கட்டிப் போட்டிருக்கும் சமூக வளைத்தளமான பேஸ்புக் இதுவரை அமெரிக்காவில் மட்டுமே அலுவலகங்கள் வைத்துள்ளது.
இப்போது முதன் முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறது பேஸ்புக். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனது பொறியாளர் அலுவலகத்தை நிறுவியிருக்கிறது ஃபேஸ்புக்.
பேஸ்புக்கின் லண்டன் அலுவலகத்தின் தலைவர் பிலிப் கூறும்போது,” பேஸ்புக் லண்டனில் தனது அலுவலகத்தைத் திறந்திருப்பதால் பேஸ்புக்கிறக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.

 மேலும் லண்டன் பேஸ்புக்கிற்கு ஏற்ற நகரம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சிறிய குழுவாக லண்டனில் ஆரம்பிக்கும் பேஸ்புக் விரைவில் மிகப் பெரிய வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டன் பேஸ்புக் குழுவுடன் இணைந்து பணிபுரிய புதிதாக 22 பணியாளர்கள் தேவை என்றும் கூறியிருக்கிறார்.
உலகச் சந்தையை மையமாக வைத்தே பேஸ்புக் தனது அலுவலகத்தை லண்டனில் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தனது சேவையை அதிக அளவில் பெரிதுபடுத்த இந்த லண்டன் அலுவலகத்தை பேஸ்புக் தொடங்கியிருக்கிறது.
கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரை அமெரிக்காவில் பேஸ்புக்கின் வளர்ச்சி 0.86 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் ஜப்பானில் 66 சதவீதமும் பிரேசிலில் 54 சதவீதமும் மற்றும் இந்தியாவில் 20 சதவீதமும் இருந்தது.
எனவே இந்த வளர்ச்சியை அதிகரிக்க பேஸ்புக்கிற்கு அமெரிக்காவிற்கு வெளியிலும் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. அதற்காகத்தான் இந்த புதிய லண்டன் அலுவலகத்தை பேஸ்புக் தொடங்கியிருப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன.
Read more…

குழந்தைகளின் நினைவாற்றலை எவ்வாறு அதிகரிக்கச் செய்வது ?

memory powe,yapakam,ninaivu,minnel
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கணும்-னா, அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க மறக்கமாட்டாங்க. சில குழுந்தைகளுக்கு படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் ஃபெயில் ஆகும்போது, அது அவர்களுக்கு ஒரு மனக் கஷ்டத்தை தந்து வேதனையைத் தருகிறது. அப்படி இருக்கும் குழந்தைகளது ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில டிப்ஸ்...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள் :

1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

2. நிமோனிக்ஸ் (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.

3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.

4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க.
Read more…

உடல் எடையை எளிதாக குறைக்க ஐஸ் கட்டி சாப்பிடுங்கள்


ice cube,uutal edai,body weight
ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். அந்த ஐஸ் கட்டிகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைக்க செய்கிறது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
உடல் எடை எளிதில் குறைய...
* எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது. ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலம் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்துவிடுகின்றது.
* ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
* பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
* ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
* எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
* ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
* எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்" என்பதை மனதில் கொண்டு எதையும் உண்ண வேண்டும்.
Read more…

அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்

ovvaamai,alergy,utal,noi
இன்றைய காலகட்டத்தில் அலர்ஜியானது பலருக்கு ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கு நமது உடலில் உள்ள திசுக்கள் வழக்கத்திற்கு மாறாக செயல்படுவதால் ஏற்படுவதே ஆகும். அதுமட்டுமல்லாமல் உடலானது மிகவும் உணர்திறன் மிக்கதாகவும், எளிதில் கிருமிகளால் பாதிக்கக்கூடியதாகவும் மாறிவிடுகிறது.

 அதிலும் எந்த இடத்தில் அலர்ஜியானது ஏற்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அலர்ஜியானது ஏற்படும். இவ்வாறு அலர்ஜி ஏற்படும் போது, அதனை சாராதணமாக விட கூடாது, விடவும் முடியாது. ஏனெனில் அலர்ஜியானது வந்துவிட்டால் ஒரு இடத்தில் நிம்மதியாக உட்காரக் கூட முடியாது. மேலும் இன்றைய காலத்தில் கலரும் வேலைக்காக அடிக்கடி இடமானது மாற வேண்டியிருக்கிறது. ஆகவே அத்தகைய அலர்ஜி எப்படி திடீரென்று வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, எவ்வாறு அதிலிருந்து குணமாவது என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...


அலர்ஜி எப்படி வரும்?
பொதுவாக அலர்ஜியானது தூசி, பூச்சிக் கடி மற்றும் உணவுப் பொருட்களால் வரும். அதுமட்டுமல்லாமல் புதுமையான சூழ்நிலைகளாலும் வரும். அதிலும் உணவுகளான முட்டை, வேர்கடலை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் மற்றும் பால், சோயா பீன்ஸ், சாக்லேட், கோதுமை போன்றவற்றை உண்பதாலும், தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் ரீதியான காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பது, பூச்சிகள் கடித்து அதனை சாதாரணமாக நினைத்து இருப்பது போன்றவற்றால் அலர்ஜியானது வருகிறது.


அறிகுறிகள்...
கடுமையான தலைவலி, அதிகபடியான காய்ச்சல், மன அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல், பதட்டம் அடைதல், கண்களைச் சுற்றி கருவளையம் வருதல், ஆங்காங்கு வீக்கங்கள், தேவையில்லாத அரிப்புகள், சருமமானது சிவப்பு நிறத்தில் இருப்பது போன்றவையெல்லாம் இருந்தால் அலர்ஜி இருப்பதற்கான காரணங்களாகும்.
அலர்ஜி போவதற்கான வீட்டு மருந்து...

1. சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது ஒரு சிறந்த பலனையும் தரும்.

2. பாதாம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

3. எந்த பொருளையும் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவ விருப்பம் இல்லாதவர்கள், புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து, சிறிது சர்க்கரை கலந்து, தினமும் இரண்டு முறை பருகினால், அரிப்புகள் போய்விடும்.

4. அலர்ஜி வந்தால் எப்போதும் அரிப்புகள் தான் அதிகம் வரும். அதற்கு பப்பாளி விதையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனால் அரிப்புகள் எளிதில் குணமாகிவிடும்.

5. மற்றொரு இயற்கையான வழி என்னவென்று கேட்டால், எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.

6. கசாகசா விதைகளுடன், தண்ணீர் மற்றம் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினால் உடனே அரிப்புகளானது போய்விடும்.

7. அலர்ஜி போவதற்கு ஒரு எளிமையான வழி என்னவென்றால் வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள் சாற்றினாலான வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தாலும் அலர்ஜியானது போய்விடும். அதுமட்டுமல்லாமல் 5 துளிகள் ஆமணக்கெண்ணெயை ஏதேனும் ஒரு கப் பழங்களுடன் அல்லது பழச்சாற்றுடன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதிலும் சிறந்தது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை ஜூஸ் செய்து ஒன்றாக கலந்து குடித்தாலும் அலர்ஜி மற்றும் அதனால் வந்த அரிப்பும் பறந்தே போய்விடும்.. 
Read more…

சிகிச்சை மூலம் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆக மாறிய ஆண்

pennaaka mariya aan
அமெரிக்காவில் உள்ள ஓகியோநகரை சேர்ந்தவர் கோடி (26). ஆணாக பிறந்த இவர் தனது 12-வது வயதில் பெண்மை உணர்வு பெற்றார். அதில் இருந்தே தன்னை பெண் போன்று அலங்கரித்து வந்தார்.

பிரபல பாப் பாடகிகள் பிரிட்னி ஸ்பியர், கிறிஸ்டினா ஆகுலேரா ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தார். 12-வது வயதில் பள்ளியில் நடந்த விழாவுக்கு பிரிட்னி ஸ்பியர் போன்று சிவப்புநிற இறுக்கமான கவுன் அணிந்து சென்று இருந்தார்.

அன்று அவர் பிரிட்னி ஸ்பியர் போன்று இருப்பதாக தெரிவித்தனர். ஆகவே அவரை போன்ற உருவம் பெற விரும்பிய கோடி கடந்த 2002-ம் ஆண்டில் பெற்றோர் உதவியுடன் செக்ஸ் மாற்று ஆபரேசன் செய்து கொண்டார்.

அதில் இருந்து தனது பெயரை கரா என மாற்றிக் கொண்டார். உடலில் முழு பெண்மை தோற்றம் ஏற்பட ரூ.45 லட்சம் செலவில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் தற்போது மார்பகங்கள், நீண்ட தலைமுடி உருவாகி பிரிட்னி ஸ்பியர் போன்ற தோற்றத்துடன் அவர் காணப்படுகிறார்.

தற்போது தான் பிரிட்னி ஸ்பியர் போன்று இருப்பதாகவும், தன்னுடன் பல வாலிபர்கள் வெளியிடங்களில் டேட்டிங் (சுற்றி திரிய) விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Read more…

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பலமணி நேரம் மிரட்டிய மன நோயாளி


பிலிப்பைன்ஸ் நாட்டின் குயிசான் நகரில், ரெய்மர் பார்பரன் என்ற பெண் தனது 9 வயது மகன் மார்க் ஜேசன் பினீடாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மனநிலை பாதித்த சிறுவன், மார்க் ஜேசனை திடீரென பிடித்து இழுத்து, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது குழந்தை கத்தி முனையில் உயிருக்குப் போராடுவதை அறிந்து சாமர்த்தியமாக செயல்பட்டார். அந்த மனநிலை பாதித்த சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்டுப் பார்த்தார்.

ஆனால் அச்சிறுவனோ கத்தியை மார்க் ஜேசனின் கழுத்தில் வைத்து அழுத்தியபடி யாரும் நெருங்க விடாமல், பற்களை நறநறவெனக் கடித்து மிரட்டினான். அப்போதும் சாந்தமாக இருந்த தாய், சிலுவையைக் காட்டி, என் குழந்தையை விட்டுப் போ என கூறியுள்ளார். அதற்கும் அச்சிறுவன் அசையவில்லை. மாறாக குழந்தையின் கழுத்தை இன்னும் வேகமாக நெரித்தான்.

இதனால் பயந்துபோன அந்த தாய், இப்பிரச்சினையில் போலீசார் தலையிட அனுமதித்தார். இதையடுத்து போலீசார் அவனுடன் சாமர்த்தியமாக பேசி, குழந்தையை மீட்டனர். இருப்பினும் குழந்தையின் கழுத்தில் லேசான காயங்கள் இருந்தன. உடனடியாக அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இரவு 11 மணியளவில் பிடிபட்ட குழந்தை, மறுநாள் காலை 7.30 மணிக்குத்தான் மீட்கப்பட்டான். இத்தனைக்கும் மனநிலை பாதித்த அந்த சிறுவன், குடிப்பதற்கு தண்ணீர்தான் கேட்டுள்ளான். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனைக் கைது செய்தனர்.

Read more…

ஆறுமாதமாக பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த பாம்பு

kuliyalarai,snake,minnel
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள சுஹோவில் என்ற இடத்தில் அனிகா (வயது 28) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டு குளியல் அறையில் சுமார் 21/2 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 6 மாத காலத்திற்கும் மேல் அது அங்கேயே இருந்திருக்கிறது. ஆனால் யாருடைய கண்ணிலும் படாமல் வாஷ் பேஷனுக்கு அடியில் பதுங்கியுள்ளது.

சம்பவத்தன்று அனிகா தற்செயலாக கீழே குனிந்து பார்க்கும் போது பாம்பு இருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் அதிர்ச்சியில் கூச்சல் போட்டதால் பாம்பு ஊர்ந்து ஜன்னல் வழியாக வெளியே தப்பிச் சென்று விட்டது. இந்த பாம்பு பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும், அது விஷமற்றது என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் வீட்டு உரிமையாளர் கூறினார்.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

அந்நிய ஆடவனுடன் ஓடிப்போன மகள்களை சுட்டுக் கொன்ற தந்தை


minnel,art,thupaki
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள நாட்அலி மாவட்டத்தில் இளம் சகோதரிகள் 2 பேர், வாலிபர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.
நான்கு நாட்களுக்குப் பின்னர், ஓடிப்போன சகோதரிகள் 2 பேரும் இன்று தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த அப்பெண்களின் தந்தை, சகோதரிகள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹெல்மண்ட் மாகாண போலீசார் மகள்களை சுட்டுக் கொன்ற தந்தையை கைது செய்தனர். சகோதரிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஓடிப்போன வாலிபருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள அந்த வாலிபர் நேட்டோ படையினரின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பழகுவது தவறு என இஸ்லாம் கூறுவதால், இத்தகைய அத்துமீறல்களுக்கு ஆப்கனின் பெரும்பாலான குடும்பங்கள் கடும் தண்டனை வழங்குவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

காதல் தோல்வியா? கவலை வேண்டாம்!


kaathal tholvi,minnel,minnal
காதல் என்பது புனிதமானது.
 அது இருவரின் மனதிலும் 
தோன்றும். அதுவே ஒருவர் கூறி ஒருவர் ஏற்கவில்லை என்றால் 
அது ஒருதலைக் காதல் ஆகிவிடும். 
அப்படி காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா என்ன?

 இதனால் வாழ்க்கை தான் சீரழியும்.
பொதுவாக ஒருதலைக் காதலானது ஒருவர் மற்றொருவரை இம்ப்ரஸ் பண்ணாமல் வராது.அப்படி காதல் வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவலை வேண்டாம். காதல் தோல்வி ஆகிவிட்டது என்று சிலர் தற்கொலை செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் வரும். அந்த வாழ்க்கையை ஒரு வரம் என்றும் சொல்லலாம். அப்படி கிடைக்கும் அற்புத வாழ்க்கை சாதாரண விஷயமல்ல. நாம் தான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே!

மீண்டும் பழைய பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். அப்படி புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

சொல்லப்போனால் காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அந்தக் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், மனதிற்குள் ஒரு தாஜ்மகாலைக் கட்டி தோற்றுப்போன காதலை நினைத்து பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் ஒரு சுகமான அனுபவமே! காதல் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்கலாம் என்று சிலர் கேட்கலாம். உலகில் காதல் இல்லாத எவரும் இல்லை, அந்த காதல் சுவாசம் மாதிரி ஒரு நொடியும் நம்மை விட்டு போகாது. அடுத்த காதல் எப்போது வேண்டுமானாலும் வரும். எனவே கவலைப்படாமல் தயாரா இருங்க!

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter ,google+இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

தொலைக்காட்சித் தொடர்களால் தொலையும் வாழ்க்கை

tholaikaatchi,naatakam,thotar
தொலைக்காட்சிகள்  பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் நீ என போட்டி போட்டு கொண்டு செய்து வருகின்றன. ஏதோ இன்றைய பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக தகாத உறவை வைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன.சமுதாயத்தில் முன்னேறியுள்ள பெண்கள் இதனை ஒடுக்க எதிர்ப்பு காட்டாமல் இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அகவே இப்படிப்பட்ட இழிவான தொடர்களை ஒளிபரப்பும் சேனல்கள் தாங்களாகவே முன் வந்து அதனை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இது விரைவான உலகம். விரைவாக பணக்காரியாக வேண்டுமென கொள்ளை ஆசை எல்லா பெண்களின் மனதிலும் புகைந்து கொண்டு இருக்கிறது. இப்படி எல்லாம் சென்றால் சீக்கிரமாக அனைத்து வசதிகளோடு சுகபோகமாக வாழலாம் என டிவிகளில் வரும் தொடர்களில் காட்டும் போது அவை அவர்களை தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது.

சில பெண்கள் அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களின் மனம் மாறிட வாய்ப்பு உள்ளது. ஆணுக்கு சம்பாதிப்பது மட்டுமே வேலை. ஆனால் குடும்பத்தையும், பிள்ளைகளையும் கவனிப்பது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பாக உள்ளது.

கணவன் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போனால் குடும்பம் பெரும் நஷ்டத்தில் அகப்பட்டு சீரழியும் சமயத்தில் சீரியலில் பெண் தகாத தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றுவது போல வரும் காட்சி தான் அந்த தருணத்தில் அவள் முன் வந்து நிற்கும். அவளும் அதுபோல தடம் மாற முற்படலாம்.

பெரும்பாலும் தொடர்களை பார்ப்பது எல்லாம் வேலைக்கு போகாத வீட்டிலுள்ள பெண்கள்தான். கணவன்,மனைவிக்குள் சின்ன பிரச்சனை வந்தாலும் தொடரில் தற்கொலை செய்து கொள்வது போல வந்தால்  அதுபோல் தற்கொலை செய்து கொள்ள முற்படுவாள்.

இல்லையேல் கணவனை பழிவாங்குவது போல் காட்சி வந்தால் அவை மாதிரியே கணவனை கொல்ல முற்படுவாள். சிறுவயதில் பெண்கள் தொடரை காணும் போது அதில் இளம்பெண்கள் பல ஆண்களோடு சோர்ந்து சுற்றுவதுபோல காட்சி வந்தால் தானும் பிற்காலத்தில் வளர்ந்து பெரியவளாகும் போது அவ்வாறு செய்ய  வேண்டுமென மனதில் பசுமரத்து ஆணிப்போல் பதித்து விடும்.

இறுதியில் அதுபோல செயல்பட முற்படுவார்கள் சில இளவட்ட இளைஞிகள். சீரியலில் லவ்வுதான் பிரதானமானது  என காட்டும்போது வாழ்கைக்கு அவை தான் அவசியமென பிள்ளைகளின் மனதில் தொற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் வயது வித்தியசமின்றி காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

பெண்கள் தான் குடும்பத்தின் ஆணிவேர். இவர்களிடம்  தொலைகாட்சி  தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்து கொண்டு இருக்கிறது. இறுதியில் அவள் கெடும் போது குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்தும் சிதைத்து போய் பாழாய் போக போவது உறுதி. தொடர்களால் பெண்கள் சீரழிவது உண்மை என்பது புலனாகிறது.
Read more…

அப்துல் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர்

abdulkalaam,mukanool,facebook
2020-ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எனவே இந்த இலக்கை அடைய இளைஞர்கள் கனவு காண்பதுடன், முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்’ என்று அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் அறிவுறுத்தி வருகிறார்.
மேலும், தன்னுடைய அனுபவம், கருத்து ஆகியவற்றைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள சமூக இணையதளமான பேஸ்புக்கில் www.facebook.com/officialkalam எனும் பக்கத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதில் ஏராளமானோர் இணைந்து, கலாமின் கருத்துகளைக் படித்தும், அதற்கு தங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்தும் வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் இணைந்துள்ளனர்.

இதுபற்றி, கலாம் தனது பக்கத்தில், 'நண்பர்களுக்கு நன்றி. நாம் இப்போது 10 லட்சம் பேராக, வலிமை வாய்ந்த சமூகமாக உருவாகி உள்ளோம். எனவே, தங்களது சிறந்த கருத்து, கனவு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள், என்று தெரிவித்துள்ளார்.
Read more…

உணவில் உறைப்பு அதிகமானால் ஆரோக்கியம் குறையலாம்

uraippu,milakaai,unavu
இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர். ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை. இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
வயிற்று வலி : காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
இரைப்பை புண் : உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும். மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.
இரைப்பை அழற்சி : சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும். அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உட்னே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.
ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more…

பூமியை விட இருமடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

581g,astrology,minnel
கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
அது 22 ஒளி வருடம் தூரத்தில் உள்ளது. இதற்கு 'கிளிசெ 581ஜி' என பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரியது. பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும்.

இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அவை மேற்பரப்பில் உறைந்தும் கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.

Read more…

முடிக்கு சாயம் தீட்டுவது ஆபத்தானது

mudi,saayam,narai
ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர்.தலைமுடியை கறுப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
கறுப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

டையில் இருக்கும் ரசாயனங்களான பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, போன்றவை நம் ஹார்மோன்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கின்றனவாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படுமாம். அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் பலரும் தலைக்கு மட்டுமல்லாது மீசையைக் கூட விட்டுவைக்காமல் டை அடிக்கின்றனர் இதுவும் கூட உடலுக்கு தீங்குதரக்கூடியவைதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஹேர் டையினை உபயோகிப்பதை விட செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நரைமுடியை மாற்ற முயற்சிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதான பின்னர் ஏற்படும் நரை என்பது அழகை அதிகரிக்கத்தான் செய்யும் அதனை மாற்ற முயற்சி செய்யாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்வதுதான் அழகோடு ஆரோக்கியமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.
Read more…

குடும்ப வாழ்க்கையின் சந்தோசத்தை சீர்குலைக்கும் சந்தேகம்

doubt,santhsam,kanavan manaivi
 குடும்ப உறவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு. தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் சாத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் நிபுணர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் நிபுணர்களின் முதல் அறிவுரை.

அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக் கூடாது, வீட்டு வாசலில் நிற்கக் கூடாது, செல்போனில் பேசக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.

அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள். இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும்.

தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

கணவனோ மனைவியோ அவர்களுக்கு என்று சில தனித்துவம் உண்டு. அவரவர்களுக்கு என உள்ள எல்லைக்குள் இருந்து கொண்டால் சிக்கல் இல்லை. சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் மருத்துவர்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள் அப்புறம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும் என்கின்றனர் நிபுணர்கள்.
Read more…

கண்களை நோய்களிலிருந்து காக்க மீன் வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்

மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்நோய்கள் எட்டிப்பார்க்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.மீன் எண்ணெயில் டிஹெச்ஏ அதிகம் காணப்படுகிறது. இது ரெக்டினாவை பாதுகாக்கிறது. மேலும் மீனில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், சி, இ, வைட்டமின்கள், பீட்டா கரோட்டீன், மற்றும் துத்தநாகம் போன்றவை கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வின்போது பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்த குறைப்பாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜுன் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

நீங்களும் சமூக வலைத் தளங்களால் பாதிக்கப் பட்டுள்ளீர்களா?

mukanool,fasebuk,twitter,
இங்கிலாந்து சல்போர்டு பல்கலைக்கழகத்தின், சல்போர்டு பிசினஸ் ஸ்கூல் சார்பில் சமூக இணைய தளங்களின் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.அதன் அறிக்கையில்.கருத்து சொன்னவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணைய தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.பலர், அதனால் தங்கள் நிலை மோசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தனர்.

தொடர்பில் இருக்கும் நண்பர்களின் சாதனைகள், திறமைகளை அறிந்து ஒப்பிட்டு பார்ப்பதால், தங்கள் நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கவலை அதிகரிப்பதாகவும் 3ல் இரண்டு பங்கினர் கூறினர்.

பேஸ்புக், டுவிட்டரால் ஓய்வு எடுக்க நேரமில்லை என்றும், தூக்கம் குறைந்து விட்டதாகவும் பலர் தெரிவித்தனர்.

சமூக இணைய தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் பணியிடத்தில் பிரச்சினையும், உறவினர்களின் கோபத்தையும் சந்திப்பதாக 3ல் ஒரு பங்கினர் தெரிவித்தனர்.
அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

கூண்டினுள் புலியால் கடித்துக் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்ட மனிதன்

zoo,mirukam,minnel,denmark
டென்மார்க்கில் உள்ள கோபன்கெகன் நகரில் மிருக காட்சி சாலை உள்ளது. ஒரு கூண்டில் புலி அடைக்கப்பட்டிருந்தது. இந்த கூண்டுக்குள் சுற்றுலா பயணி ஒருவர் புலியால் கடித்து கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பெயர் லார்ஸ்போர்க் (வயது 22) என்பது தெரியவந்தது.புலி அவரது கழுத்தை கடித்து கொன்றிருந்தது. அவர் எப்படி புலி கூண்டுக்குள் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் நடக்கும் போது அருகில் யாரும் இல்லை. இதனால் அவரை காப்பாற்றவும் முடிய வில்லை.

ஒருவேளை அவர் தற்கொலை செய்வதற்காக புலிக்கூண்டுக்குள் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தார். ஆனால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியிட வில்லை.

 ன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

உடலில் சூரிய ஒளி படுவதால் தேவையற்ற உடல் பருமன் ஏற்படாது

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. இதுவே நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இதயநோய்களுக்கும் காரணமாகிவிடுகிறது. உடல்பருமனுக்கு காரணம் உணவுப்பழக்கம் மட்டுமல்ல உடலில் வெயில் படாமல் இருந்தாலும் உடல்பருமானாகும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.வெயில் படாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறைதான் உடல் பருமனாவதற்கு ஒரு காரணம் என்று நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது கெட்ட கொழுப்பை கரைக்கிறது. ஆனால் இன்றைக்கு குழந்தைகளை பூட்டிய அறைக்குள் வைத்திருப்பதாலும் வெயிலே படாமல் வளர்ப்பதாலும் அவர்களுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே உடல்பருமன் அதிகரித்துவிடுகிறது.

அதேபோல் பூட்டிய அறைக்கு ஏசி போட்டு பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டு அதன் காரணமாகவும் பெரும்பாலோனோரின் உடல் பருமனடைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.உடம்பில் பழுப்பு கொழுப்பு என்றும் வெள்ளைக்கொழுப்பு என்றும் இரண்டு ரக கொழுப்புகள் உள்ளன. உடல் குண்டாவதற்குக் காரணம் வெள்ளைக்கொழுப்பு. பழுப்புக் கொழுப்பானது குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொருள். எடைக்கு எடை, சக்கரையைவிட அது 300 மடங்கு அதிக உடல் சூட்டைக் கொடுக்கக்கூடியது.

பிறந்த குழந்தையின் உடலிலும், குளிர்காலத்தில் நிலத்தடியில வளைக்குள் ஹைபர்னேஷன் செய்யும் முயல் போன்ற உயிரினங்களிலும் பழுப்புக்கொழுப்பு காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பு. உடலை குண்டாக்காது. உடலில் வெயில்பட்டால் பழுப்புக்கொழுப்பு உருவாகிறது. வெயில் இல்லாத குளிர்காலத்தில் இது வெப்பம் கொடுத்து உடம்பைக் காக்கிறது.

மனிதர்கள் வெயில்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் சாப்பிடும் சாப்பாடு வெள்ளைக் கொழுப்பாக மாறி உடம்பை குண்டாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள் எனவே தினசரி சிறிதுநேரமாவது வெயிலில் காய்ந்தால் உடல் குண்டாவதை தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து கண்நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு, இதயநோய், உயர்ரத்தஅழுத்தம், புரோஸ்டேட், மார்பகப்புற்றுநோய் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

தொடர்ச்சியாக தொலைகாட்சி பார்ப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்

 அதிக அளவில் தொலைக்காட்சி முன்பு நேரத்தை செலவழிப்பவரா? அது உங்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும் வெடிகுண்டு என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். டிவி முன்பு பழியாக கிடப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய்கள், திடீர் மரணங்கள் போன்றவை ஏற்படும் என்றும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர்.

ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒள்றை மேற்கொண்டனர். 1970 முதல் 2011 வரை அவர்கள் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில் மனிதர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய், திடீர்மரணங்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தினசரி அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு குறைந்த வயதிலேயே திடீர் மரணங்கள் சம்பவிக்கும் வாய்ப்பு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தொலைக்காட்சி பார்ப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது. அதற்காக டிவி முன்பே பழியாகக் கிடக்காமல் அவ்வப்போது இடைவெளி விடுவது நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

நம் ஊரில் காலையில் நல்லநேரம் கேட்பது தொடங்கி இரவு அழுகை சீரியல்கள் வரை அனைவரும் டிவியே கதியாக கிடக்கின்றனர். அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

குடும்பப் பிரச்சினைக்காக தனது குழந்தையை கொல்ல முயன்ற தாய்

ammaa,pillai,thaai,kolai
தஞ்சை அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளி வரகூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவியும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் சசிக்குமார் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் சுனில் என்ற மகனும் ஒரு பெண் கைக் குழந்தையும் உள்ளனர்.

சுனில் அங்குள்ள பள்ளியில் 1 - ம் வகுப்பு படித்து வருகிறான். முதல் மனைவியும், 2 - வது மனைவியும் தனித் தனியாக வசித்து வந்தனர். சசிகுமாருக்கும் கவிதாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  சசிகுமார் தனது முதல் மனைவி வீட்டிலேயே தங்கி விட்டார். இதனால் கவிதா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.கணவர் குடும்பம் நடத்த வராததால் கவிதா கோபத்தில் இருந்தார். நேற்று மாலை சுனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அவன் மீது கவிதா மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சுனில் சத்தம் போட்டான். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தின் ஓடி வந்தனர். உடனே கவிதா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தீக்காயம் அடைந்த சுனிலை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  போலீசாரிடம் சுனில் அளித்த வாக்கு மூலத்தில் தாய் கவிதா தான் தனது உடலில் தீ வைத்ததாக கூறினான். இதனை தொடர்ந்து கவிதாவை போலீசார் கைது செய்தனர். வயது குழந்தையை தாய் தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

பெண்ணின் மூக்கை கடித்துத் துப்பிய மனிதன்

mooku,kati,mananoyali
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சாரதா தேவி தினாத் யாதவ். இவருக்கு முழங்கால் வலி இருந்தது. இதில் இருந்து விடுபட, மும்பை அருகே உள்ள சீவ்ரி தர்காவுக்கு சாரதா தேவி தனது கணவருடன் வந்தார்.அங்கு ஏற்கனவே ஜூஹூ பகுதியைச் சேர்ந்த ஆனந்த் காசிநாத் என்ற வாலிபர், மன நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். இருவருக்கும் ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

காசிநாத்துக்கு தர்கா மவுலானா விபூதி கொடுத்தார். அதன் பிறகு காசிநாத்துக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது. அருகில் இருந்த சாரதா தேவி, அவரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் கட்டுப்படவில்லை. சாரதா தேவியின் மூக்கை காசிநாத் கடித்து துப்பினார்.

துண்டான மூக்குடன் சாரதா தேவி மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்காலிகமாக மூக்கு ஓட்ட வைக்கப்பட்டுள்ளது. காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்தால்தான் மூக்கு பழையபடி அமையும் என டாக்டர்கள் கூறினர். மூக்கை கடித்த காசிநாத்துக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

நடனமாடிய பெண்ணைத் தேடிவந்த மரணம்

dance,aattam,thupakki
அமெரிக்காவில் ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது. பார்ட்டி ஒன்றில், காவலரை கட்டிப்பிடித்து ஒரு பெண் டான்ஸ் ஆடியபோது அந்தக் காவலர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அதிலிருந்து குண்டு பாய்ந்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெட்ராய்ட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் அடைஷா மில்லர். இவர் தனது 25வது பிறந்த நாளையொட்டி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது பலரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினர். அப்போது அந்த நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுக்க ஒரு போலீஸ் அதிகாரியும் வந்திருந்தார். டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மில்லர், அந்த அதிகாரியின் பின்னால் போய் பின்னாலிருந்து அவரைக் கட்டிப்பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அதிகாரி வைத்திருந்த துப்பாக்கியின் விசையில் கை பட்டு சுட்டு விட்டது.
dancenatanam,

துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு, மில்லரின் நுரையீரலுக்குள் புகுந்து இதயத்தைத் துளைத்து விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மில்லரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

இளநரையைத் தடுக்கும் இயற்கை வழிகள்

mudi,narai,thalai
வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.

1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.

5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.

ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.
  
இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

நேத்திரம் இனி minnel.com இல்

 அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வந்தனங்கள். இதுவரை காலமும்  www.nethiram.blogspot.com எனும் பெயரில் இயங்கி வந்த எமது தளத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் இனிமுதல்  எமது  எமது சொந்த முகவரியுடன் www.minnel.com எனும் பெயரில்  இயங்க உள்ளது  என்ற செய்தியை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே உங்கள் அன்பான ஆதரவை தொடர்ந்தும் எமக்கு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம் .

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

குழந்தைகளின் பற்சுகாதாரத்தில் முழுமையான கவனம் செலுத்துங்கள்

kulanthai,pal,paraamarippu
முகத்திற்கு அழகு தருவதில் பற்கள் முக்கியப் பங்கை வகிக்கிறது. அந்த பற்களானது சிலருக்கு எடக்கு மடக்காக இருக்கும். இதனால் அவர்கள் அழகு குறைந்தவர்களாக, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல், தன்னம்பிக்கை இழந்து காணப்படுவர். இவ்வாறு பற்களின் அழகு கெடுவதற்கு காரணம், சிறு வயதிலேயே முறையான பராமரிப்பு இல்லாதது ஆகும் என்று பல் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆகவே குழந்தையின் பல் வரிசை சரியில்லாமல் போனால் குழந்தையின் அழகு சிதைந்துவிடும். மேலும் 'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்துவிட்டால் அவர்களால் சரியாக தெளிவாக பேச முடியாது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கையை கூட இழந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்துவிட்டால், அவர்களால் எதையும் நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.
பொதுவாக குழந்தைகளுக்கு 6-7 மாதத்தில் பல் முளைக்கத் தொடங்கும். அவ்வாறு பல்லானது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது அவர்களுக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது குழந்தைகள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் போது தொற்றுக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயானது குழந்தையை பிடித்துக் கொள்ளும். ஆகவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
முக்கியமாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் இனிப்பானது குழந்தைகளின் வாயில் தங்கி, பற்களானது சொத்தையாகி விழுந்துவிடும். ஆகவே குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுப்பொருளை கொடுத்தாலும், அதைச் சாப்பிட்டப்பின் குழந்தையின் வாயை நன்கு கழுவ வேண்டும்.
மேலும் குழந்தைகள் உணவுகளை சாப்பிடுவதை விட நொறுக்கு தீனி சாப்பிடுவது தான் அதிகம். இதனாலே அதிக அளவில் குழந்தைகள் பற்களை இழக்கின்றனர் என்று புள்ளி விவரம் ஒன்றும் கூறியுள்ளது. எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டு முடித்தாலும், குழந்தையின் வாய்க்குள் தண்ணீரை விட்டு கழுவி விடுவது நல்லது. இதனால் பற்கள் சொத்தையாகி விழுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…

புகைத்தல் பழக்கத்தை நிறுத்த நினைக்கிறீர்களா?

pukaiththal,niruththa,sikaret
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல். பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும் நன்றாக தெரியும். ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

2. சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.

3. புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.

4. டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

5. நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.

6. சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

7. எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.
இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.


அன்பின் வாசகரே!மேலே உள்ள எமதுFacebook Fan Page ஐ Like செய்து எமது பயனுள்ள தகவல்களை facebook இல் இலகுவாக பெற்றிடுங்கள்.அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் Facbook,Twitter இல் Shareசெய்திடுங்கள்.நன்றி.
Read more…